Friday, May 10, 2019

அமெரிக்காவில் உள்ள அரோர சிவன் மீது பாடியது


அரோரா வெங்கடாசலபதி கோவிலில் உள்ள சிவன் மீது பாடப்பட்டது

உற்ற ஆலமும் காளமும் மிட றேற்றி மாமணி நீலமாய்
முற்றும் ஆனவன் ஆடிடும்பிர தோஷ வேளையில் முந்தியே
மற்றுப் பற்றென மல்லிகார்ச்சுன சுவாமி நின்பதம் வாழ்த்தினேன்
பற்றிவி டாதுனை நான் மறக்கினும் பாதுகாத்தருள் தெய்வமே!

பிரம்ம ராம்பிகை தன்னுடன்வளர் மல்லிகார்ச்சுன தேவனே
அருள்வ தேகுண மாகக்கொண்டநின் ஆலயம் தனைக் கூடினேன்
வரம்பல் லாயிரம் வேண்டிடா மலே வாரி நல்கிடும் தெய்வமே
தரமென்றே யெனை ஏற்றருள் பிற வாத நன்னெறி வாய்க்கவே!

No comments:

Post a Comment