அம்பலத்தாடும் அரன்
யார் யார் யார்
யாரிவர் யார்
அம்பலத்தாடும்
அரனார் யார்
நம் சிவகாமி
நாயகன் யார்
தில்லையில் ஆடும்
சிதம்பரம் யார்
எல்லை கடந்தே
இருப்பவர் யார்
இயக்கத்திற்கோர்
இயக்கம் யார்
இயங்கிக் கொண்டே
இருப்பவர் யார்
திருவாதிரையில்
திகழ்பவர் யார்
மரகத லிங்க
மாமணி யார்
ஆகாயத்தின்
அதிசயன் யார்
வாகாய் நடனம்
வகுத்தவன் யார்
புலியும் பாம்பும்
புகழ் பாட
நிலவும் நடன
நிர்மலன் யார்
அவர்தான் எங்கள்
நடராஜர்
அம்பலவாணர்
அருள் நேசர்
No comments:
Post a Comment