காயத்ரி பதிகம்
"ஒவ்வொரு தெய்வத் திற்கும்
உள்ளன
மந்தி ரங்கள்
அவ்விதம் ஜபங்கள் செய்ய
அவையவை
நன்மை செய்யும்
எவ்வகைத் தெய்வமும் தான்
ஏற்கிற
வண்ணம் இங்கே
செவ்விய மந்த்ரம் ஒன்று
செப்பிட
வேண்டுகின்றேன்" 1
நாரத முனிவர் கேட்க
நவின்றனர்
திருமால்" ஆமாம்
சீரிய மந்த்ரம், எந்தத்
தெய்வமும் ஏற்கும் மந்த்ரம்
காரிய சித்தி நல்கும்
காயத்ரி
மந்த்ரம் ஒன்றே
ஓரிரு மூன்று நான்கிற்(கு)
ஒப்பிலை
உண்மை, உண்மை" 2
காயத்ரி வேத மூலம்
காயத்ரி
ஒளியின் வெள்ளம்
காயத்ரி ஞான மார்க்கம்
காயத்ரி
கருணை ஊற்று
காயத்ரி அகத்தின் ஜோதி
காயத்ரி
ஆன்ம வேதி
காயத்ரி தெய்வ வாக்கு
காயத்ரிக்கிணை
காயத்ரி 3
தனிவழி செல்ல வேண்டின்
தடைகளை
நீக்க வேண்டின்
இனியொரு வழியே இல்லை
எனுமிடர்
போக்க வேண்டின்
குனிகிற நிலைமை மாறிக்
கோபுர
மாக வேண்டின்
நினைவிலே காயத் ரீயை
நிறுவுக
, அதுவே போதும் 4
நீறினைக் கையெ டுத்து
நெஞ்சிலே
காயத் ரீயைச்
சீருர நிறுத்திக் கொண்டு
ஜெபித்ததைப்
பூசிக் கொண்டால்
வேரறப் பில்லி சூன்யம்
வீழ்ந்திடும்,
பேசும் பேச்சில்
வீரியம் கூடும், அச்சம்
விலகிடும்,
துணிவு சேரும் 5
யாரிதைச் செபிக்கின்றாரோ
அவருக்கு
மட்டுமின்றி
ஊரிலே உள்ளோருக்கும்
உறவுக்கும்,
தேசத்திற்கும்
பாரிலே உள்ளோருக்கும்
பலன்களைக்
கொடுக்கு மென்று
நேரிய சாத்தி ரங்கள்
நிச்சய
மாகச் சொல்லும் 6
காயத்ரி உபதே சத்தைக்
கடமையாய்ப்
பெற்ற பேர்கள்
போயெத்தைச் செய்த போகும்
பொருந்தும்
இம்மந்திரத்தில்
தோயவே மறந்து விட்டால்
தூய்மையும்
குலமும் நீங்கும்
ஆயநற் பொக்கிஷத்தை
அலட்சியப்
படுத்த லாமா? 7
காலையில் உச்சிப் போதில்
கதிரவன்
கீழே செல்லும்
மாலையில் காயத்ரீயை
வகையுடன்
ஜபித்து வந்தால்
மூலமாம் ஜோதி மெல்ல
முகிழ்த்திடும்,
மேலே செல்லும்
ஞாலமும் இனிய தாகும்
நம்முளே
சாந்தி பூக்கும் 8
எதையிதைக் காக்க வென்றே
எதையுமே
சொல்ல வேண்டாம்
அதுவது
தத்த மக்கே
அமைந்திடும்
ஒழுங்கில் செல்ல உதவிடும் அன்னை மந்த்ரம்
"உன்பதம் சரணம்" என்னும்
பதங்களைச் சொல்லி மந்த்ரம்
பாவித்தால்
அதுவே போதும்! 9
வதனங்கள் ஐந்தும் நம்மை
வாழ்கெனச்
சொல்லும். எங்கும்
முதனிலை வகிக்கும் பேறு
முந்திடும்,
கோள்கள் எல்லாம்
அதனதன் தீய போக்கை
அடக்கியே
சுருட்டிக் கொள்ளும்
எதனையும் விஞ்சி நிற்கும்
இனியகா
யத்ரி போற்றி! 10
No comments:
Post a Comment