Saturday, May 18, 2019

தோதெ னப்பல நீகொ டுக்கவே!


தான தத்தனத் தான தத்தனத்
 தான தத்தன தான தத்தனா

 தீய தட்சனைக் கூறு பட்டிடச்
     சீறி வெட்டிய வீர பத்திரா
   தேவ கொத்தினைச் சீவி ரத்தமச்
    சேறி லெத்திடு கால நர்த்தனா
சீய பத்திரைத் தேவி சித்தமத்
    தேர்க ளத்திடை நேச முற்றவா
    தேசு மிக்கநற் சோதி மொத்தமச்
    சேர்ம கத்தெடு  தீர மிக்கவா
தாயெ னத்தனித் தூறு பத்திரச்
    சாற ளித்திடு தேவ உத்தமா
    சாக சத்தெதிர்ச் சாக சத்திறச்
      சாத னைத்திற லேறு பத்திரா
தூய பக்தியிற் றோயு முத்தமத்
    தூணெ னத் திட மான பற்றுளார்
    சோத னைப் படத் தேவை யற்றிடத்
    தோதெ னப்பல நீகொ டுக்கவே!


தேர்களம்- தேர்ந்தெடுக்கப்பட்ட களம்,
மகம்- யாகம். பத்திர காளியும் வீரபத்திரரும் யாகத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்டுப் பின்னர் கணவன் மனைவி ஆயினர். போர்க்களத்திில் நேசம் பிறந்தது. அதனால்தான் பத்ரகாளி சமேத வீரபத்திரர் என்கிறோம்

No comments:

Post a Comment