எவரும் செல்ல முடியாது
அறுசீர் விருத்தம்
உராயும் எண்ணச் சூட்டுக்குள்
உலாவிச் செல்லும் இவ்வாழ்வில்
பராவி யாரோ பெரியவரின்
பாதை பற்றிச் செல்வமென
நிராசை யின்றிச் சென்றிடலாம்
நினைவில் கூடக் காகுத்தன்
இராமன் பாதை பின்பற்றி
எவரும் செல்ல முடியாது
பண்புக் கூட்டம் அவன்வீட்டுப்
படியில் இருந்து தவம்செய்யும்
எண்ண உறுதி முன்னாலே
இமயம் இடியும், உண்மையிலே
அண்ணல் இராமன் பெயர்சொன்னால்
அடுப்புப் புகையும், தெய்வதமாய்
விண்ணில் முக்தி வீட்டில்நம்
விலாசம் போட்டு வைத்திருக்கும்!
No comments:
Post a Comment