Saturday, May 18, 2019

வீரபத்ரர் துதி

இன்று எங்களூர்(தெற்கிலந்தைக்குளம்) குலதெய்வம்(வீரபத்ரர்) கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதோ வீரபத்ரர் துதி
வீரபத்ரர் துதி
தான தத்த தத்த தான
தான தத்த தானனா
வீர முற்று வெற்றி வீர
வேட மற்ற தேவனே
வேள்வி தட்டி எற்றி வீசி
வீறெ டுத்த வீரனே,

தீர முற்றெ திர்ப்ப தேது?
தேவ ரற்று வீழவே
சீறி நட்டெ டுத்த பாத
வீறு ரைக்க லாகுமோ?
நேரெ திர்த்து நிற்கொ ணாது
நீச முற்றி ஓடியே
நீத மற்ற எத்த ரோய
நீயெ திர்த்து வீசினாய்

வேர டுத்த பக்தி கூடி
மேவு சுத்த நேயர்கள்
வீறு பற்று வெற்றி கூட
வேணு முற்ற வீரனே!
இலந்தை 17-5-2019

No comments:

Post a Comment