வாராகி
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி – மிகக்
கோலா கலமாகக் கும்மியடி
நம்மரும் வாராகி தேவியின் பேர்பாடி
நல்ல படியிங்கே கும்மியடி - கும்மியடி
கோலா கலமாகக் கும்மியடி
நம்மரும் வாராகி தேவியின் பேர்பாடி
நல்ல படியிங்கே கும்மியடி - கும்மியடி
வானைத் தடவிடும் அம்மை கிரீடத்தில்
வண்ண ஒளிவைரம் பாருங்கடி
தானைத் தலைவியின் வீரத்தைப் பாடியே
தட்டித் தட்டிக் கைகள் சேருங்கடி - கும்மியடி
வண்ண ஒளிவைரம் பாருங்கடி
தானைத் தலைவியின் வீரத்தைப் பாடியே
தட்டித் தட்டிக் கைகள் சேருங்கடி - கும்மியடி
காலை எடுத்துத் தரையில் வைத்தால் -இந்தக்
காசினி முற்றும் அதிருமடி
சாலப் புடைத்தே எதிரியை வீழ்த்திடும்
சத்தத்தில் விண்மீன் உதிருமடி - கும்மியடி
காசினி முற்றும் அதிருமடி
சாலப் புடைத்தே எதிரியை வீழ்த்திடும்
சத்தத்தில் விண்மீன் உதிருமடி - கும்மியடி
தன்னை வணங்கிடும் பக்தரைக் காத்திடத்
தாயெனப் பாசம் பொழிபவளாம்
அன்பர்கள் சிக்கும் வழக்குகளில் வேண்டும்”
ஆதாரச் சொற்கள் மொழிபவளாம் - கும்மியடி
தாயெனப் பாசம் பொழிபவளாம்
அன்பர்கள் சிக்கும் வழக்குகளில் வேண்டும்”
ஆதாரச் சொற்கள் மொழிபவளாம் - கும்மியடி
என்ன கொடுப்பத வளறிவாள் அதை
என்று கொடுப்பத வளறிவாள்
அன்னதை எவ்விதம் எங்குக் கொடுப்பதென்(று)
அத்தனையும் அவள் தானறிவாள் - கும்மியடி
என்று கொடுப்பத வளறிவாள்
அன்னதை எவ்விதம் எங்குக் கொடுப்பதென்(று)
அத்தனையும் அவள் தானறிவாள் - கும்மியடி
No comments:
Post a Comment