Monday, May 13, 2019

கருப்பன் வரவு

கருப்பன் வரவு

ஆடிவருகிறான் கருப்பன் ஆடி வருகிறான்- மிக
ஆனந்த மாகயிங்கே ஆடி வருகிறான்
கூடவருகிறான் இருளன் கூடவருகிறான் மிகக்
கூத்தாடிக் கூத்தாடிக் கூட வருகிறான்

பக்தரெலாம் பாட்டுப்பாட ஆடி வருகிறான் - இங்கே
பாதங்களில் சலங்கை கட்டி ஆடி வருகிறான்
எத்தடையும் போக்கிடவே ஆடிவருகிறான் - நம்மை
என்றென்றும் காத்திடவே ஆடிவருகிறான்

குண்டாந்தடி தூக்கியிங்கே ஆடிவருகிறான் மிகக்
கொண்டாட்ட மாய்க்குதித்தே ஆடி வருகிறன்
கண்டவர்கள் பதறிடவே ஆடிவருகிறான் - அவன்
கண்ணிரண்டும் சிவந்தபடி ஆடி வருகிறான்

அஞ்சிட வேண்டாம் எவரும் அஞ்சிட வேண்டாம்- நம்மை
ஆதரிக்கும் தெய்வமவன் அஞ்சிட வேண்டாம் -
தஞ்சம் கொண்ட அன்பர்களைக் காக்க வேண்டியே அவன்
தங்குதிங்கு தங்கெனவே ஆடிவருகிறான்

No comments:

Post a Comment